DeepSeek என்ற சீன AI நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய லாங்குவேஜ் மாடல் என்ற பெருமையைப் பெற்ற ஒரு சில மாதங்களிலேயே சீனாவைச் சேர்ந்த மற்றொரு AI நிறுவனம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வீடியோ ஜெனரேஷன் டெக்னாலஜியை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலமாக உருவாக்கியுள்ளது.
Kling AI என்ற அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் கிரியேட்டிவான சினிமா படங்களை உருவாக்கி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பந்தயத்தில் தற்போது கால் எடுத்து வைத்துள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் KLING 2.0 Master என்ற அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக யூசர்கள் முற்றிலும் ரியலிஸ்டிக்கான வீடியோக்களை உருவாக்கலாம். இது கிட்டத்தட்ட ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் வரும் திரைப்படங்களின் தரத்தை விட அதிகமாக இருப்பதாக பல யூசர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, அதிக தரம் கொண்ட இமேஜ்களை உருவாக்கும் ஒரு கருவியான KOLORS 2.0 இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் இணைந்து காட்சிகள் மூலமாக கதை சொல்லுவது மற்றும் யூசர்களுக்கு விருப்பமான முறையில் வீடியோக்களை உருவாக்கிக் கொடுப்பது என்று பல்வேறு ஆச்சரியங்களை நிகழ்த்துகிறது.
அதாவது, உங்களுக்கு வேண்டிய விஷயங்களை வார்த்தைகளில் நீங்கள் பிராம்ட்டுகளாகக் கொடுக்கும்போது, அதில் கொஞ்சம் கூட பிழை இல்லாமல் தத்ரூபமான வீடியோக்களை உருவாக்கும் இதன் திறனே பிற அப்ளிகேஷன்களில் இருந்து KLING 2.0 Master-ஐ தனித்துவமாகக் காட்டுகிறது. ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வர வேண்டும் என்று நீங்கள் எண்ணும் விஷயங்களை விவரமாக டைப் செய்து இன்புட்டாக கொடுக்க வேண்டும். உடனடியாக AI உங்களுக்கு அதனை காட்சிகளாக படமாக்கிக் கொடுக்கிறது. AI வீடியோ மாடல்களில் நீண்ட காலங்களாக சவால்களாக இருந்து வரும் கேமராவின் அசைவுகள், உணர்வுகளின் வெளிப்பாடு, ஒவ்வொரு கேரக்டரின் நுணுக்கமான செயல்பாடுகள் போன்ற பல்வேறு அற்புதமான அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
வீடியோக்களில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் தத்ரூபமான நடிப்புகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பேசும்போது வரும் வாய் அசைவு அப்படியே படத்தில் வரும் டயலாக் உடன் ஒத்துப் போகிறது. இந்த அப்ளிகேஷன் வெளியானதில் இருந்து எக்கச்சக்கமான யூசர்கள் தங்களுடைய படைப்புகளை வெளிப்படுத்துவதற்கு இதனைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி அதனை சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் பதிவு செய்து வருகின்றனர். டிஜிட்டல் கிரியேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்கள் சீனாவின் இந்தப் புதிய படைப்பைப் போற்றி வருகின்றனர்.



Leave a Reply