Smartphone storage-ஐ அதிகரிக்க 5 சிறந்த வழிகள்!

ஸ்மார்போன் வைத்திருக்கும் அனைவரும் அதன் ஸ்டோரேஜ் நிறைந்துவிடும் பிரச்சினையும் கண்டிப்பாக அடிக்கடி அவதிப்பட்டிருப்போம். அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?

தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டாலும், அதிகளவிலான தகவல்கள் தற்போது ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்படுவதால், ஒரு கட்டத்திற்கு பின்பு ஸ்டோரேஜ்கள் நிரம்பி வழிகின்றன. தற்போது ஸ்மார்ட்போன்களில் அதிகளவு ஸ்டோரேஜ் கொடுக்கப்படுவதால், பல்வேறு ஸ்மார்ட்போன்களில் மைக்ரோ SD கார்டு (மெமரி கார்டு) பயன்பாட்டிற்கான வசதியும் கொடுக்கப்படுவதில்லை. இந்த பிரச்சினைக்கு 5 சிறந்த வழிமுறைகளைப் பார்க்கலாம்.

தேவையில்லாத செயலிகளை அன்இன்ஸ்டால் செய்யுங்கள்:

நம்முடைய ஸ்மார்ட்போன்களில் தேவையான செயலிகளை விட தேவையில்லாத செயலிகள் அதிகமாகவே இருக்கும். தினசரி நாம் பயன்படுத்துவது, 5 முதல் 10 செயலிகளாகத் தான் இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிலோ நூற்றுக் கணக்கான செயலிகள் பயனில்லமால் கிடக்கும். அவற்றில் முக்கியமான செயலி என ஒரு 25 செயலிகளை எடுத்துக் கொண்டாலும் 40-க்கும் மேற்பட்ட செயலிகள் பலனில்லாமல் தான் இருக்கும்.

குறிப்பிட்ட செயலிகளானது நாம் இன்ஸ்டால் செய்யும் போது 50MB, 100MB என குறைவான அளவுடையதாகவே இருக்கும். ஆனால், காலப்போக்கில் அவை அப்டேட் ஆகி, அவற்றில் தகவல்கள் சேர்ந்து 1GB, 2GB எனப் பெரியதாகியிருக்கும். அவ்வாறான செயலிகளைக் கண்டறிந்து நீக்கிவிட்டால் ஸ்மார்ட்போனில் பெருமளவு ஸ்டோரேட் ஸ்பேஸை மிச்சம் செய்யலாம்.

ஆப் கேச்சியை கிளியர் செய்யுங்கள்:

நாம் பயன்படுத்தும் செயலிகள் வேகமாக இயங்குவதற்கு கேச்சி (Cache) என்ற ஒன்று பயன்பாட்டில் இருக்கும். இதனை தற்காலிக ஸ்டோரேஜ் என்று சொல்லலாம். நாம் ஒரு விஷயத்தை கேட்கும் போது அதனை வேகமாக செய்து கொடுப்பதற்காக இந்த கேச்சிகளை தற்காலிக ஸ்டோரேஜாக செயலிகள் பயன்படுத்தும். ஸ்மார்ட்போன் செட்டிங்கில் சென்று இந்த கேச்சிகளை நீக்குவதன் மூலமாக கணிசமாக அளவு ஸ்டோரேஜை மிச்சப்படுத்தலாம்.

அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்யுங்கள்:

தற்போது பெரும்பாலும் பேட்டரியை கலட்ட முடியாத வகையிலேயே ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும், தொடர்ந்து ஸ்மார்ட்போனுக்கு இடைவெளியே கொடுக்காமல் சார்ஜ் செய்து, சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் சில நேரங்களில் தற்காலிக ஃபைல்கள் மற்றும் சிஸ்டம் கேச்சிகள் நம்முடைய போன் ஸ்டோரேஜை நிறைத்துக் கொண்டிருக்கலாம். ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் அவற்றை நாம் நீக்கி, ஸ்டோரேஜுக்கு புத்துணர்ச்சி அளிக்க முடியும்.

போட்டோஸ் மற்றும் வீடியோக்கள்:

நம்முடைய ஸ்மார்ட்போன்களில் குறைந்தபட்சம் 25% இடத்தையாவது நமக்கு வரும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆக்கிரமித்திருக்கும். முக்கியமாக வாட்ஸ்அப்பில் நமக்கு அனுப்பப்டும் போட்டோக்களும், வீடியோக்களும் சேர்ந்து காலப்போக்கில் அதிகளவிலான இடத்தை ஆக்கிரமித்திருக்கும். நமக்கு மிகவும் தேவையான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்குவதன் மூலம் ஸ்மார்போன் ஸ்டோரேஜை மிச்சப்படுத்தலாம். முக்கியமாக வாட்ஸ்அப் செட்டிங்கில் போட்டோ மற்றும் வீடியோக்கள் ஆட்டோமேட்டிக்காக டவுண்லோடு ஆவதைத் தடுத்து வைக்கலாம். இதன் மூலம் நமக்கு வேண்டிய போட்டோஸ் மற்றும் வீடியோக்களை மட்டும் நாம் கிளிக் செய்து டவுண்டலோடு செய்து கொள்ளவும், ஸ்டோரேஜைக் காப்பாற்றவும் முடியும்.